உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. நாம் சுவைக்கும் ஒவ்வொரு கோப்பை தேநீரிலும் பல தலைமுறை மக்களின் ரத்தமும், கண்ணீரும் சில நூற்றாண்டு கசப்பு சரித்திரமும் கலந்திருக்கிறது தெரியுமா? ஆதிமனிதனின் நொறுக்குத்தீனியைத்தான் இன்றைக்கும் தியேட்டர்களில் கொறித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் நம்ப முடிகிறதா?
செடியில் காய்க்கும் மீனை அறிவீர்களா? தித்திக்கும் திராட்சைக்கு வில்லனாக விளங்கிய பேரரசர் யார்? நூடுல்சும்,பாஸ்தாவும், இடியாப்பமும் ஒரு தாய் மக்களா? இந்தியப் பிரிவனையால் புகழ்பெற்ற உணவு எது? கிச்சடிக்கு நமது தேசிய உணவாகும் தகுதி இருக்கிறதா?
உணவின் சரித்திரத்தில் சுவாரசியப் புதையல்கள் ஏராளம். உணவை நோக்கிய தேடல்களினால்தான் நாகரிக வளர்ச்சி தொடங்கி காலனியாதிக்கப் பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மூலக் காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாசார கலப்பினால் புதிய உணவு வகைகள் பிறந்தன. அவை நம் ருசிக்கு கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு.
பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம்வரை விவரித்து செல்லும் இந்நூல்,கமகமக்கும் உணவினைவிட , அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என உணர வைக்கிறது.
உணவு சரித்திரம் – II
- Brand: முகில்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹288
Tags: unavu, sarithiram, 2, உணவு, சரித்திரம், –, II, முகில், Sixthsense, Publications