உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..உணவை நோக்கிய தேடல்களினால்தான் ஆதி நாகரீக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்க பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மீள காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாச்சார கலப்பினால் , புதிய , புதிய உணவுகள் பிறந்தன. அவை நம் ருசிக்குக் கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு.
பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் சொல்லும் இந்நூல், கம கமக்கும் உணவைவிட அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என்று உணர வைக்கிறது.
Tags: unavu, sarithiram, உணவு, சரித்திரம், முகில், Sixthsense, Publications