• உறுதி மட்டுமே வேண்டும்-Urudhi Mattume Vendum
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொருபந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும்.அதற்கு முதலில் தேவை, கமிட்மெண்ட். எடுத்துக்கொண்ட வேலையை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கும்வரை ஓயமாட்டேன் என்னும் கர்மசிரத்தை. எந்த சஞ்சலத்துக்கும் சலசலப்புக்கும் இடம் கொடுக்காத மனக்கட்டுப்பாடு.வேறு வழியே இல்லை. ஒரு தவமாக எடுத்துக்கொண்டு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இலக்கை நிர்ணயித்துக்கொண்டால் மட்டுமே வெற்றி கிடைத்துவிடாது. மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு அதை நோக்கி நாம் பயணம் செய்தாகவேண்டும். அர்ஜுனனின் கண்களுக்குப் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. மரமோ அதன் கிளைகளோ அல்ல.உறுதி மட்டுமே வேண்டும். செய்துமுடிப்பேன் என்னும் மனஉறுதி. அந்த உறுதியை நீங்கள் பெறுவதற்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துசக்தி. உங்கள் கனவுகளை விரிவாக்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான சூட்சுமங்களையும் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

உறுதி மட்டுமே வேண்டும்-Urudhi Mattume Vendum

  • ₹130


Tags: , சோம. வள்ளியப்பன், உறுதி, மட்டுமே, வேண்டும்-Urudhi, Mattume, Vendum