• உயிர்... ஓர் உரத்த சிந்தனை-Uyir Oru Uratha Sinthanai
2018-இல் மில்வாக்கி நகரில் இருந்து சிகாகோவுக்கு ரயிலில் பயணம் செய்தேன். அமெரிக்காவில் முதல் ரயில் பயணம். அந்த அனுபவத்திற்காகவே விமானத்தைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்தேன். 25 டாலர் டிக்கெட் என நினைவு. சுமார் 2 மணி நேரப் பயணம். பெரிய பெட்டிகள் இருந்ததால், விமானப் பயணத்தின் போது செய்வதைப் போல நம் லக்கேஜ்களை செக்-இன் செய்ய வேண்டும்.  சிகாகோ வந்து இறங்கியவுடன் பெட்டிக்காக கன்வேயர் அருகே காத்திருந்தேன். ரொம்ப நேரம் ஆகியும் பெட்டி வரவில்லை. இன்னொரு குழப்பம் என்னவென்றால் , கன்வேயரில் வேறு பெட்டிகளும் இல்லை. வேறு யாரும் பெட்டிக்காக காத்திருக்கவும் இல்லை. அப்போது ஒரு குண்டாந்தடி வெள்ளைக்காரன் வந்து பேச ஆரம்பித்தான். என்னுடைய 4 அமெரிக்கப் பயணங்களில் அப்படி யாரும் வந்து பேசியது கிடையாது. ஏதேதோ கதை சொல்லி, காசு கேட்டான். நான் பதில் சொல்லவில்லை. உடனே எதிர்பாராத விதமாக தெலுங்கில் பேச ஆரம்பித்து விட்டான். ஏமாற்றுபவர்கள் தான் எத்தனை திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் !காத்திருந்தது போதும் என கவுண்டரில் சென்று விசாரித்தால் , டிக்கெட்டை எல்லாம் வாங்கிப் பார்த்துவிட்டு பெட்டியைத் தேடினார் ஒரு பெண் அலுவலர். இன்னும் வரவில்லை என்று சொல்லிவிட்டார். மீண்டும் காத்திருப்பு. ரயில் நிலையத்திற்குள் நிறைய காவலர்களையும் பார்க்க முடிந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் விசாரித்த போது பெட்டியைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவந்தார். நான் கன்வேயர் இருக்கும் இடத்திற்கு வரும் முன்னரே பெட்டி வந்து, சில சுற்றுகள் சுற்றிவிட்டு உள்ளே சென்றுவிட்டதாக சொன்னார். குறைந்த நேரப் பயணம் என்பதால் மொத்த ரயிலில் வேறு யாருமே பெரிய பெட்டிகளுடன் வந்து செக்-இன் செய்திருக்கவில்லை. அதனால் வந்த பிரச்சனை.  ரயில் நிலையத்தின் உள்ளேயே இருந்து ஊபர் டாக்சி புக் செய்துவிட்டு வெளியே வர நகர ஆரம்பித்தேன். கீழ்த்தளத்திற்கு படிக்கட்டில் இறங்கி வரவேண்டி இருந்தது. வாசலைத் தேடி வெளியே வந்தேன். ஊபரில் குறுஞ் செய்தி வந்தது. "உன்னைக் காணவில்லை. புக்கிங்கை கேன்சல் செய்கிறேன் " என டிரைவர் அனுப்பி இருந்தார். அதற்கு 5 டாலர் கட்டணம் வேறு கிரெடிட் கார்டில் பிடித்து விட்டார்கள். அந்த டிரைவர் ஒரு முறை என் செல் போனுக்கு அழைத்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. இது பெரு நகரத்தின் இரண்டாவது சம்பவம். அந்த ரயில் நிலையத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாயில் இருக்கும் என நினைக்கிறேன். அவன் எந்த கேட்டில் வந்தானோ, நான் எந்த கேட்டில் நின்றேனோ!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

உயிர்... ஓர் உரத்த சிந்தனை-Uyir Oru Uratha Sinthanai

  • ₹60


Tags: uyir, oru, uratha, sinthanai, உயிர்..., ஓர், உரத்த, சிந்தனை-Uyir, Oru, Uratha, Sinthanai, டாக்டர் ருத்ரன், கவிதா, வெளியீடு