1930-50 ஆம் ஆண்டு காலகட்டம்- மலையாளக் கதையின் பொற்காலமாக இருந்தது. இக் காலகட்டத்தில்தான் மலையாளத்தில் சிறுகதை இலக்கியம் வளர்ந்து பக்குவமெய்தியது.
1930-க்கு முன்பும் ஏாளமான கதைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. முதல் கதை வெளிவந்தது 1894-ல் என்று கருதப்படுகிறது. மூர்ங்கோத்துக் குமாரனுடையது அக் கதை. பிற்காலத்தில் நூற்றுக்கும் அதிகமான கதைகள் எழுதிப் பிரபலமடைந்த அவரை மலையாளக் கதையின் தந்தை என்று கூறலாம். இந் நூற்றாண்டின், முப்பதுக்கள்வரை மலையாளக் கதை அதன் இளம்பிராயத்திலிருந்தது. மேற்கத்திய நாடுகளில் உருவாகிவந்திருந்த நவீன கதைகள் மலையாள மொழியில் வந்தடைந்திருக்கவில்லை. கலையழகற்ற, நீண்ட வர்ணனைகள் அடங்கியவையாக இருந்தன அந்நாளையக் கதைகள். மங்களமாக முடிகின்ற திருமணங்களும் வீரச்செயல்களும் கொண்ட கதைகள் நிரந்தரமாக விரும்பப்பட்டன.
உயிர்த்துடிப்பின் இதய ஒலி - Uyirthudipin Idhaya Oli
- Brand: எஸ்.எம். ஆறுமுகம்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹85
Tags: uyirthudipin, idhaya, oli, உயிர்த்துடிப்பின், இதய, ஒலி, , -, Uyirthudipin, Idhaya, Oli, எஸ்.எம். ஆறுமுகம், சீதை, பதிப்பகம்