• வானத்துக்கு வேலி-Vaanathuku Veli
பூமி தோன்றியபோது அது அனல் வீசும் உருண்டையாக இருந்தது. அந்தக் கட்டத்தில் பூமியின் மீது இருந்த எண்ணற்ற எரிமலைகளிலிருந்து பல்வேறு விதமான வாயுக்களும் நீராவியும் ஓயாது வெளிப்பட்டன. இது நீண்ட காலம் நீடித்தது.எரிமலைகளிலிருந்து வெளிப்பட்ட நீராவியானது பின்னர் மேகங்களாகத் திரண்டன. பூமியின் வெப்பம் தணிந்து குளிர ஆரம்பித்தபோது, இந்த மேகங்களிலிருந்து மழை பொழியத் தொடங்கியது. ஆண்டுக்கணக்கில் மழை பொழிந்தது.அப்படிப் பெய்த ஓயாத மழையின் தண்ணீர் அனைத்தும் பூமியின் பள்ளமான பகுதிகளை நோக்கி ஓடியது. பூமியில் இருந்த ஏராளமான பிரம்மாண்ட பள்ளங்கள் நிரம்பியபோது கடலாக மாறின.பூமியில் இப்போது ஐந்து பெரும் கடல்கள் உள்ளன. ஆர்ட்டிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் கடல், பசிபிக் பெருங்கடல், தெற்குப் பெருங்கடல் ஆகியவை உள்ளன. ஏழு கண்டங்கள் உள்ளன. அவை ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவை.கடந்த பல கோடி ஆண்டுகளில் பெருங்கடல்கள் சிறுத்துள்ளன அல்லது பெருத்துள்ளன. ஒரு கால கட்டத்தில் எல்லாப் பெருங்கடல்களும் சேர்ந்து ஒரே கடலாக இருந்ததும் உண்டு. இதற்குக் கண்டங்கள் இடம் பெயர்ந்துள்ளதே காரணம்.உலகின் கண்டங்கள் அனைத்தும் ஒரே கண்டமாக விளங்கிய காலம் உண்டு. கண்டங்கள் ஒன்று சேர்ந்து ஒரே கண்டமாக இருக்கும். இதை சூப்பர் கண்டம் எனலாம். பின்னர் இவை தனித்தனியே பிரியும். பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி ஒன்றுசேரும். மறுபடி இவை விலகும். இப்படிப் பல தடவை நிகழ்ந்துள்ளது.ஒரு முறை ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகியவை ஒன்று சேர்ந்து இருந்தன. அப்போது இந்தியத் துணைக்கண்டமானது இவற்றுடன் சேர்ந்து இருந்தது. கோண்டுவானா என்று அழைக்கப்பட்ட இந்தக் கண்டம் சுமார் 18 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்தபோது கண்டங்கள் தனிதனியே நகர்ந்து சென்றன. இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து, அப்போது ஆசியாவையும் ஐரோப்பாவையும் உள்ளடக்கியதாக இருந்த லாராசியா கண்டத்துடன் மோதியது. இதன் விளைவாகவே இமயமலை தோன்றியது. அப்போது லாராசியாவின் தென்புறத்தில் அமைந்திருந்த டெத்திஸ் கடல் மறைந்தது. டெத்திஸ் கடலில் இருந்த தண்ணீர் எங்கும் போய் விடவில்லை. அந்தக் கடலின் தண்ணீர் வழிந்து இப்போதைய இந்தியப் பெருங்கடலுடன் வந்து சேர்ந்துகொண்டது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வானத்துக்கு வேலி-Vaanathuku Veli

  • ₹30


Tags: vaanathuku, veli, வானத்துக்கு, வேலி-Vaanathuku, Veli, ப.முருகேசன், கவிதா, வெளியீடு