கேரள மாநிலம், பாலக்காடை பூர்வீகமாக கொண்ட வாசுதேவன் - மாதவி தம்பதி, திருமணம் முடிந்ததும், திருவண்ணாமலையில் குடியேறி, வணிகம் செய்கின்றனர். சுஜாதா, ஜெயஸ்ரீ, ஷைலஜா என்ற மூன்று குழந்தைகள் பிறக்கின்றன.ஷைலஜா ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும் போது, வாசுதேவன் மரணிக்கிறார். மாதவியின் உடன்பிறப்பு பாதுகாவலராகிறார். குழந்தை வளர்ப்பையும், குடும்ப பொறுப்பையும் ஏற்கும் மாதவி, தன் வேதனை, துயரம், ஆற்றாமை என, அத்தனை உணர்வுகளுக்கும் ஆறுதலாக, மலையாளபுத்தகங்களை வாசிக்கதுவங்குகிறார்.தன் மூத்த மகள், தமிழ் படிக்கத் துவங்கும் போதே, தானும் தமிழ் கற்கிறார். நான்கைந்து ஆண்டுகளுக்குள், தமிழின் மிகப் பெரிய எழுத்தாளர்களின், மிகப்பெரிய புத்தகங்களையும், எளிதாக அவரால் வாசிக்க முடிகிறது.பள்ளிக் குழந்தைகளான ஜெயஸ்ரீ, ஷைலஜாவிற்கு, அம்மா படித்த புத்தகங்களின் மீது, ஆர்வம் துளிர்க்கிறது. தங்களின், 7, 8 வயதில், அவர்களுக்கு வாசிப்பு அறிமுகமாகிறது. பள்ளி, கல்லுாரிகளில் தமிழ் இனிக்கிறது. அப்போது கூட, இருவருக்கும் மலையாளம், பேச்சு மொழியாக மட்டுமே இருக்கிறது. அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்க, அந்த குழந்தைகளின் வழியாக, மலையாள எழுத்துக்களை கற்கின்றனர். இலக்கியம் படித்த அவர்கள், இலக்கியத்தை மொழி பெயர்க்க துவங்குகின்றனர்.
வார்த்தைகள் கிடைக்காத தீவில்-Vaarthaigal Kidaikaatha Theevil
- Brand: கே.வி. ஜெயஶ்ரீ
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹40
Tags: vaarthaigal, kidaikaatha, theevil, வார்த்தைகள், கிடைக்காத, தீவில்-Vaarthaigal, Kidaikaatha, Theevil, கே.வி. ஜெயஶ்ரீ, வம்சி, பதிப்பகம்