கணேசனையும் உடன் வண்டி ஓட்டிய மற்ற வண்டிக்காரர்களையும், வண்டிமாடுகளையும், வைக்கோலையும், வைக்கோல் போர்களையும், வைக்கோல் கத்தைகளையும்,வைக்கோல் பிரிகளையும் காலம் தன் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றுதான் இந்த வரலாற்றை எழுதத் தொடங்கினேன். இந்த நூலிலுள்ள ஒவ்வொருவரும் நிஜமான வாழ்வை வாழ்ந்தவர்கள். உண்மையான பெயர்கள்.கற்பனைக் கலக்காத கதாப்பாத்திரங்கள்.நூலில் வரும் ஒவ்வொரு ஊரும் கடலூர் மாவட்டத்தில் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்ற ஊர்கள். ஒரு சங்கிலிப்பிரி போல என் மனத்தில் பதினைந்து ஆண்டுகளாகச் சுற்றிக்கிடந்த ஒரு பெருங்கனவை இலக்கியமாக்கிவிட்ட நிறைவைப் பெறுகிறேன். தமிழுலகம் இந்த வைக்கவண்டி கணேசனையும் அது சுமந்துவரும் வாழ்வியல் அனுபவங்களையும் அப்படியே ஏந்திக்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்குள் ஆழமாக இருக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வைக்கவேண்டி கனேசன்

  • ₹340


Tags: vaikavandi, ganesan, வைக்கவேண்டி, கனேசன், தங்கமணி கனேசன், வானவில், புத்தகாலயம்