வள்ளலாரது பாடல்கள் தொகுக்கப் பெற்று, “திருவருட்பா” என்ற பெயரில் 1867இல் வெளியாயின. பழமைப்பிடிப்புள்ள சைவர்களோ தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய பஞ்சபுராணங்களே அருட்பாக்கள் என்றும் - பன்னிரு திருமுறைகளே அருட்பாக்கள் என்றும் கூறி வள்ளலாரது பாடல்களைக் ‘குற்றமுடைய மருட்பாக்கள்’ என்று கண்டித்தனர். வள்ளலாரது பாடல்களை அருட்பா என்று நிரூபிக்கும் பொருட்டு வள்ளலாரது குழுவினரும்; மருட்பா என்று நிரூபிக்கும் பொருட்டு நாவலரும் அவரது குழுவினரும் கண்டனப் போர்க் கொடிகளைத் தூக்கினர். பிரச்சினை, நீதிமன்றம்வரைகூடச் சென்றது.இன்று, தமிழ் இலக்கிய, சமய வரலாற்றில் வள்ளலாரின் இடமும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. நாவலருக்கும் உரிய இடம் அமைந்துவிட்டது. ஆயினும் இவ்விருவர் பற்றிப் பேசப்படும் பொழுதெல்லாம் ஏதோ ஒருவகையில் அருட்பா மருட்பா விவகாரம் இடைப்பிறவரலாகவேனும் குறிப்பிடப்படுவதைக் காணலாம். ‘பெருமக்கள் இருவருக்கும் சிறப்புச் செய்யாத வீண்வாதம்’ என்று அறிஞர் சிலர் இதனைப் புறந்தள்ளுவதும் உண்டு. ஆனால் விரிவான ஆய்வை நிகழ்த்தப்படவில்லை. இந்நிகழ்வு நடந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டதால் புனைவுகள் சிலவும் ஊடுருவிவிட்டன.இப்பின்னணியில் அருட்பா X மருட்பா போரைப் பற்றி விரிவான தனி ஆய்வாக இந்த நூல் அமைகிறது. இலக்கியச் சான்றுகளையும் வரலாற்று ஆவணங்களையும் சட்டத்தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுத்தப்பட்ட மிக முக்கியமான ஆய்வு நூல் இது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Vallalarum Naavalarum

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹250


Tags: Vallalarum Naavalarum, 250, காலச்சுவடு, பதிப்பகம்,