புலம்பெயர் தேசங்களில் அலையும் மனிதர்களையும் பொருளாதார, சமூக பாதுகாப்பைக் கோரி நிற்கிற கதாபாத்திரங்களையும் பொ. கருணாகரமூர்த்தி தன் கதைகளில் உருவாக்கிப் பார்க்கிறார். அவரது கதாபாத்திரங்கள் மூக்கைச் சிந்தியபடி நிற்பதில்லை. மாறாகப் பொதுமனத்திற்கு அச்சத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கும் பாத்திரங்களாக உருமாறுகின்றன. குடிவரவாளர்கள், கேட்பாரற்று அநாதரவானவர்கள், மரண நிழலில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருப்போர், மனப்பிறழ்வடைந்தவர்கள், விதியே என அலக்கழிப்பவர்போல கருணாகரமூர்த்தியின் அக்கறையும் கரிசனமும்! தொகுப்பிலுள்ள பதினான்கு கதைகள் ஒற்றுமைகளும் முரண்களும் நிறைந்தவை. மனிதர்களிடம், அரசியலிடம், சில நேரங்களில் மரணத்திடம்கூட அங்கதம் இழைந்த தொனியில் இணக்கத்தை வேண்டுகின்றன இக்கதைகள்.
Vanam Thirumputhal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹225
Tags: Vanam Thirumputhal, 225, காலச்சுவடு, பதிப்பகம்,