யானை நடந்தபோது அவரே யானையாகி அசைவதை உணர்ந்தார் அப்பா. மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. மேகங்களில் நிறைந்து ததும்பும் ஒளி.
Tags: vanangaan, வணங்கான், -, Vanangaan, ஜெயமோகன், விஷ்ணுபுரம், பதிப்பகம்