• வங்கத்துப் பேய்க் கதைகள்
மானுடவியலாளர்கள்‌ மனிதனின்‌ அதீத கற்பனையும்‌, மிகையுணர்வும்‌, வம்புப்பேச்சும்தான்‌ மொழிகள்‌ தோன்றக்‌ காரணம்‌ என்கிறார்கள்‌. அந்த வகையில்‌ உலகின்‌ மற்ற செழுமையான மொழிகளைப்‌ போல்‌, வங்க மொழியிலும்‌ பேய்க்‌ கதைகளுக்கென்று ஒரு பிரத்யேக இடம்‌ உள்ளது. அது அவர்களின்‌ வாழ்வியலோடு இன்றும்‌ பின்னிப்‌ பிணைந்திருக்கிறது. மந்திரம்‌, மாந்திரீகம்‌ போன்ற சடங்குகளில்‌ அபார நம்பிக்கைகொண்ட இவர்கள்‌, மனிதர்கள்‌ எப்படி இறந்தார்கள்‌ என்பதைப்‌ பொறுத்து “பெட்னி;,'ஷக்சுன்னி', 'பேஷோ,, 'பென்சப்பேச்சி', 'மெச்சோ,, அடோஷி', பேகோ”, “மம்தோ,“கெச்சோ', 'ப்ரஹ்ம்மோதைத்தியா', கொந்தொகொடா;, “கானாபுலோ, “போபா”,'ஷீகோல்‌ புரி', 'நிஷி', “குத்ரோ போங்கா', 'ரக்கோஷ்‌', 'கக்கோஷ்‌' என்றெல்லாம்‌ பேய்களை ரகம்‌ பிரிக்கிறார்கள்‌. ஒவ்வொரு பேய்க்கும்‌ ஒரு மயிர்க்கூச்செரியும்‌ நாட்டுப்புறக்கதை உண்டு. அவற்றை பின்னணியாகக்‌ கொண்டு வங்க தேசம்‌ மற்றும்‌ மேற்கு வங்காள பின்புலத்திலிருந்து வந்த மஹா ஸ்வேதா தேவி, 'விபூதிபூஷன்‌ பந்தியோபாத்யாய்‌' உட்பட 17 முன்னணி எழுத்தாளர்களால்‌ அத்திப்பூத்தார்போல்‌ எழுதப்பட்ட சுவாரஸ்யமான பேய்க்கதைகளை தேர்ந்தெடுத்து புவனா நடராஜன்‌ தமிழில்‌ மொழி பெயர்த்திருக்கிறார்‌. இவர்‌ கொல்கத்தாவில்‌ 43 ஆண்டுகள்‌ வசித்தவர்‌. வங்காலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புக்கான 'சாஹித்ய அகாதமி: விருது பெற்றவர்‌. இந்தத்‌ தொகுப்பில்‌ இடம்பெற்றிருக்கும்‌ பேய்க்கதைகளின்‌ அமானுஷ்ய அம்சம்‌ திகில்‌ கிளப்புவதாக, வன்மம்‌ தோய்ந்தவையாக இல்லாமல்‌ சமூக ஏற்றத்தாழ்வுகளைப்‌ பகடி செய்பவையாகவும்‌, அறத்தைப்‌ போதிப்பவையாகவுமே அதிகம்‌ இருக்கும்‌. ஆகவே, ஒருவகைப்‌ பேய்‌ ஒரு கதையில்‌ வருகிறது என்றால்‌ அது அவர்களது வழக்கொழிந்த மரபின்‌ நீட்சியாக, கடந்த கால நட்பு, காதல்‌, துரோகம்‌ அல்லது நன்றியின்‌ சாட்சியாகத்தான்‌ வருகின்றது என்று அர்த்தம்‌.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வங்கத்துப் பேய்க் கதைகள்

  • ₹266


Tags: vangathu, pei, kadhaigal, வங்கத்துப், பேய்க், கதைகள், புவனா நடராஜன், வானவில், புத்தகாலயம்