இடது பக்கம் தேங்கின நீரை வாரி அடித்து வீசியப்படி பஸ் நின்றது. இதற்கு முன்னால் போன பஸ்ஸூம் இப்படியே செய்திருக்க வேண்டும். பஸ் ஸ்டான்டிலுள்ளவர்கள் ஒரு அனுபவத்திற்குப்பிறகு, வருகின்ற பஸ்ஸின் வேகத்தை மனசில் குறித்துக்கொண்டு நாலாபக்கமும் சிதறி ஓடி, மறபுடியும் பஸ் நோக்கி ஓடிவந்தார்கள். எந்த மாற்றமுமில்லமால் தளர்வாய் நடைபோடும் வாழ்க்கையில் இந்த மாதிரி சிதறி ஓடுவதும், மறுபடி ஒன்று கூடுவதும் சந்தோஷம் கொடுத்துவிடும் போலிருக்கிறது. உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு கிழவனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சிரிப்பாகவே இருந்தார்கள். பஸ்ஸிலிருந்து பெருமாள் இறங்குவதற்கு முன்னால் எல்லோரும் ஏறுவதற்கு முயற்சி செய்தார்கள்..
இவ்வாறு ஆரம்பமே சுவராஸ்யமாக செல்கிறது நாவல். பாலகுமாரன் நாவல் அல்லவா? சுவராஷ்யத்திற்கும் பஞ்சமில்லாமல் இருக்கும்.. வாங்கிப் பயனடையுங்கள்.
வன்னிமரத்தாலி-Vanni Marathaali
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹100
Tags: vanni, marathaali, வன்னிமரத்தாலி-Vanni, Marathaali, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்