தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் தோற்றத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.கப்பலோட்டிய தமிழர் என்று போற்றப்படும் வ.உ.சி., தம் அரசியல் பணியினூடே சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதன்மையான நூலாகிய ‘சிவஞான போத’த்திற்கு ஓர் எளிய உரையினை எழுதி 1935இல் வெளியிட்டார். அதன் மறுபதிப்பு இந்நூல்.வ.உ.சி.யின் தமிழ்ப் புலமையினையும் தத்துவப் பயிற்சியினையும் கருத்தியல் நிலைப்பாட்டையும் புலப்படுத்தும் அரிய நூல் இது. சைவ சித்தாந்தம் தொடர்பாகப் பல்வேறு சமயங்களில் வ.உ.சி. எழுதிய கட்டுரைகளும் பாடல்களும் கடுஞ்சைவரோடு நடத்திய விவாதங்களும் படங்களும் இந்நூலுக்குப் பிற்சேர்க்கையாக அமைந்துள்ளன.வ.உ.சி.க்கும் சைவ இயக்கத்திற்கும் நிலவிய தொடர்பை விளக்கும் பதிப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதியின் முன்னுரையும், சைவ சித்தாந்த மரபில் வ.உ.சி.யின் உரை பெறும் இடத்தை அறுதியிடும் சி.சு. மணியின் ஆய்வுரையும் நூலுக்கு நுழைவாயிலாக அமைகின்றன.
Va.oo.chiyin Sivagnana Bodha Urai
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹140
Tags: Va.oo.chiyin Sivagnana Bodha Urai, 140, காலச்சுவடு, பதிப்பகம்,