‘இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் பிராண வாயு விவசாயம். அந்த விவசாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் வகைகளுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறது இந்த நூல். பசுமை விகடனில் வெளிவந்து விவசாயப் பெருமக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மண்புழு மன்னாரு’ பகுதிகள் ஏற்கெனவே ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூலின் பகுதிகளும், அதன் பின்னர் பசுமை விகடனில் தொடர்ந்து வெளிவந்த ‘மண்புழு மன்னாரு’ பகுதிகள் மொத்தமாகத் தொகுக்கப்பெற்று வெளியாகியுள்ள நூல் இது. ‘ஆவாரை சேர்த்தால் நெல் அதிகம் விளையும், அரளிச் செடியில் இருக்கிறது பூச்சி விரட்டி, எப்போது, எதை விளைவித்தால் நல்ல லாபம் கிடைக்கும், எந்தப் பட்டத்தில் எந்தெந்த காய்கறிகளைப் பயிரிடலாம், பசு கன்று ஈனும்போது செய்ய வேண்டியவை, கால்நடைகள், கோழிகள் வளர்ப்பு என விவசாயத் தொழில்கள் சார்ந்த பலப்பல நுணுக்கமான தகவல்களை & எளிய மொழியில் விவசாயிகளின் தோளில் கைபோட்டுக் கொண்டு பேசுவது போல் சொல்கிறது இந்நூல். பல பகுதிகளுக்குப் பயணம் செய்து, விவசாய வாழ்வியலின் அனைத்து ஆழங்களுக்கும் சென்று அரிய தகவல்களை சேகரித்துத் தந்துள்ளார், நூலாசிரியரும் ‘பசுமை விகடன்’ பொறுப்பாசிரியருமான பொன். செந்தில்குமார். விவசாயிகளுக்கு எழும் சந்தேகங்களுக்கு அரும் பெரும் விளக்கங்களைத் தந்து அவர்களின் ஐயம் போக்குவதில் எப்போதும் இந்த நூல் முதலிடம் வகிக்கும் என்பது திண்ணம்.
வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்
- Brand: பொன். செந்தில்குமார்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹165
-
₹140
Tags: varavu, peruguthu, selavu, kuraiyuthu, வரவு, பெருகுது..., செலவு, குறையுது!, மண்புழு, மன்னாரின், மகசூல், சூத்திரங்கள், பொன். செந்தில்குமார், விகடன், பிரசுரம்