அண்டன் ஜோ பிரகாஷ் அவர்கள் எழுதியது.
40 வருடங்களுக்கு மேலாக ,ஆப்பிள் , ஆரக்கிள்,ஹெச்பி, சிஸ்கோ , யாஹீ, கூகுள் போன்ற பல நிறுவனங்களை, உருவாக்கியபடி இருக்கும் சிலிக்கான பள்ளத்தாக்கு , சந்தேகமே இல்லாமல் சர்வதேச தொழில்நுட்பத் தலைநகரம் தான். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஹைடெக் நிறுவனங்கள் அங்கு இருக்கின்றன. இருபது லட்சத்தைத் தொடும் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். உலகம் முழுவதுமுள்ள இன்டர்நெட் டிராஃபிக்கில் நான்கில் ஒரு பகுதியை நுகர்வது சிலிக்கான பள்ளத்தாக்குதான். சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கம் வந்து சேரும் இளைஞர்களைப் போலவே , ஹைடெக் தொழில் கனவுகளுடன் சிலிக்கான் பள்ளத்தாக்கு வந்து சேரும் தொழில் முனைவோரை இங்கே ஸ்டார் பக்ஸ் , பீட்ஸ் போன்ற காபி ஷாப்களில் பார்க்கலாம். இங்கு தொழிலைத் தொடங்குவதும் எளிதானதே ஒரு கார் ஷெட் வாடகைக்குக் கிடைத்தால் போதும். கம்ப்யூட்டர் சகிதம் குடியேறி, அங்கேயே உறங்கி, உணவருந்தி, நாளுக்கு 20 மணி நேரம் உழைத்து, தமது கனவை நிறைவேற்றக் கடுமையாகப் போராடுவார்கள்!!
வருங்கால தொழில்நுட்பம்
- Brand: அண்டன் ஜோ பிரகாஷ்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹85
-
₹72
Tags: varungala, thozhil, nutpam, வருங்கால, தொழில்நுட்பம், அண்டன் ஜோ பிரகாஷ், விகடன், பிரசுரம்