• Varungkaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில்
அதிக முதலீடு இன்றி பெரும் செல்வம் ஈட்டிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதைகள்…படித்து முடித்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்று கனவு காண்பவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறார்கள். எனக்கென்று ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கான திறன்கள் என்னிடம் இருக்கின்றன. நானே ஏன் ஒரு நிறுவனமாக மாறக்கூடாது? நான் ஏன் நான்கு பேருக்கு வேலை கொடுக்கக்கூடாது? இப்படி நினைப்பவர்கள்தான் இன்று அநேகம்.இந்தப் புத்தகம் அவர்களுக்கானது. ‘ஸ்டார்ட் அப்’ என்று அழைக்கப்படும் தொடக்கநிலை நிறுவனங்கள் பிரமாண்டமான வெற்றிகளைப் பெற்றுவரும் காலகட்டம் இது. இப்படியொரு ‘ஸ்டார்ட் அப்பை’ தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படாது. பெரிய அலுவலகம் தேவைப்படாது. பணியாளர்கள் என்று பெரிதாக யாரும் தேவைப்பட-மாட்டார்கள். கோட்-சூட்டோ நுனிநாக்கு ஆங்கிலமோ கூட அவசியமில்லை.அட, புதுமையாக இருக்கிறதே என்று மற்றவர்களை வியக்க வைக்கும் ஒரு யோசனை. அந்த யோசனையைச் செயல்படுத்தத் தேவையான உழைப்பு. இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதும். Uber, Snapchat, DropBox, Spotify என்று இந்தப் புத்தகம் எடுத்துக் காட்டும் வெற்றிகரமான உதாரணங்கள் பல இந்த இரண்டின் கலவையால் மட்டுமே சாத்தியமாகி இருக்கின்றன.பதினைந்துக்கும் மேற்பட்ட ஆச்சரியமூட்டும் வெற்றிக் கதைகளை என்.சொக்கன் இந்நூலில் நமக்காகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவற்றிலிருந்து திரட்டிக்கொண்ட பாடங்களை வைத்து நம்மாலும் பல வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கிக்காட்ட முடியும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Varungkaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில்

  • ₹130


Tags: , என். சொக்கன், Varungkaalam, Ivargal, Kaiyil/வருங்காலம், இவர்கள், கையில்