‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் சொந்த வீட்டில் உள்ள சுக அனுபவமே தனிதான். அதனால்தான் இல்லாள், இல்லத்தரசி என்று மனைவியைக் கூறுவார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த இல்லம் எல்லோருக்கும் அமைகிறதா என்றால், அமைவதில்லை. அப்படியே அமைந்தாலும், அதில் ஏகப்பட்ட சிக்கல்கள். தொல்லை தராத உள்ளம் கவரும் நல்ல இல்லமாக அமைய வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுகிறோம். அப்படிப்பட்ட இல்லத்தை அமைப்பது எப்படி என்பதையும், அப்படி அமைந்த இல்லத்தில் நாம் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளையும் சிறப்பாக எழுதித் தொகுத்து வழங்கி இருக்கிறார் டாக்டர் யோகஸ்ரீ மணிபாரதி. வீடுகளைக் கட்டும்போது நாம் எத்தகைய வாஸ்து வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை, சின்னச் சின்ன விஷயங்களையும் முத்துகளைக் கோத்ததுபோல் கோவையாக வழங்கி இருப்பது நூலின் சிறப்பு. ஆன்மிக வாழ்வில் நாம் வணங்க வேண்டிய தெய்வங்களையும் அவர்களை வணங்குவதற்குரிய வழிமுறைகள், காரணங்கள் மற்றும் பலன்களை எளிய முறையில் புராணக் கதைகளின் உதாரணங்களோடு தொகுத்து வழங்கி இருப்பது இந்த நூலுக்கு இருக்கும் கூடுதல் சிறப்பு. அந்த விதத்தில் இல்லந்தோறும் இருக்க வேண்டிய நல்ல நூல் இது.
வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை
- Brand: டாக்டர். யோகஶ்ரீ மணிபாரதி
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹155
-
₹132
Tags: vasthu, aanmegam, vazhkai, வாஸ்து, +, ஆன்மிகம், =, வாழ்க்கை, டாக்டர். யோகஶ்ரீ மணிபாரதி, விகடன், பிரசுரம்