கார்ப்பரேட் உலகின் அடிப்படைப் பாடங்களைச் சுருக்கமாகவும் எளிமையாகும் சொல்லும் நூல். ஒவ்வொரு அடிப்படைப் பாடத்தையும் எளிமையான கதை மூலம் விளக்கி இருப்பது இதன் தனிச்சிறப்பு. கதைகளை நாஸ்டால்ஜியா கலந்து சொல்லி இருக்கிறார் ஜெயராமன் ரகுநாதன். ஒருவரின் இயல்பான குணநலம் எப்படி கார்ப்பரேட் வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது, எப்படி முரண்படுகிறது என்பதை விளக்குவதோடு, அதை எப்படி மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதையும் கோடி காட்டுகிறது இந்தப் புத்தகம்.
ஒவ்வொரு கதையிலும் வெளிப்படும் உணர்வுபூர்வமான தருணம், இப்புத்தகத்தை மேனேஜ்மெண்ட் புத்தகம் என்கிற தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு உயர்த்துகிறது. பல இடங்களில் தெறிக்கும் நகைச்சுவையும் நுனிநாக்கு ஆங்கிலமும், நாம் வாசிப்பது சுஜாதாவின் எழுத்தையோ என்கிற மயக்கம் ஏற்படும் அளவுக்குத் தரமாக வெளிப்படுகிறது.
கார்ப்பரேட் உலகில் நுழைய விரும்புபவர்கள், கார்ப்பரேட் உலகத்தில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள், ‘அப்படி என்ன டென்ஷன் கார்ப்பரேட் வாழ்க்கையில?’ என்று இடதுகையில் எளிதாகப் புறந்தள்ளிவிட்டுச் செல்பவர்கள் படிக்கவேண்டிய புத்தகம். இந்த கார்ப்பரேட் உலகத்தில் எப்படி இந்தியத் தன்மையுடன் செயல்படவேண்டும் என்பதை இறுதி அத்தியாயத்தில் ஆசிரியர் விளக்கி இருக்கும் விதம் கவனத்துக்குரியது.
கதைகளின் வழியே கார்ப்பரேட் உலகம் உங்கள் கண்முன்னால் விரியும், அதன் நிறைகுறைகளுடன்.
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள் - Vasunthara Sonna Corporate Kathaikal
- Brand: ஜெயராமன் ரகுநாதன்
- Product Code: சுவாசம் பதிப்பகம்
- Availability: In Stock
-
₹190
Tags: vasunthara, sonna, corporate, kathaikal, வசுந்தரா, சொன்ன, கார்ப்பரேட், கதைகள், -, Vasunthara, Sonna, Corporate, Kathaikal, ஜெயராமன் ரகுநாதன், சுவாசம், பதிப்பகம்