நம்மிடம் உள்ள நிறைகுறைகளை எப்படித் தெரிந்து கொள்வது? நம்முடைய வாழ்க்கையில், படிப்பில், தொழிலில் நம்முடைய திறமைகளைக் கொண்டு, நம் எண்ணங்களை நடைமுறைப்படுத்தி எப்படி வெற்றி காண்பது என்பதையெல்லாம் விரிவாகச் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.முதலில் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன? அதற்கான செயல் திட்டம் என்ன? எந்தக் குறிக்கோளை நோக்கி அந்தச் செயல் திட்டம் இருக்க வேண்டும்?தன் எண்ணங்களை ஒருவன் எப்படிச் செயலாக்க வேண்டும்?ஒருவனுடைய எண்ணம் மட்டுமே அவனை வெற்றியாளனாக்குவதில்லை. அவன் உடலும் மனமும் சூழ்நிலையும் அவனுக்கு அந்த எண்ணத்தைச் செயலாக்குவதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். அவனைச் சுற்றியுள்ளவர்களும் அதற்கு அவனுக்கு உதவ முன்வர வேண்டும். அதற்கு அவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் எப்படிப்பட்ட உறவு முறைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்?ஒரு மனிதனை உருவாக்குவதில் அவனது எண்ணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால்... வெறும் எண்ணங்களால் மட்டுமே ஒரு மனிதனை வெற்றியாளனாக ஆக்கிவிட முடியுமா? என்றால் அது சாத்தியமான காரியமில்லை.
வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள்
- Brand: விமல்நாத்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
- ₹130
-
₹111
Tags: vazhkaiyai, valamakkum, ennankal, வாழ்க்கையை, வளமாக்கும், எண்ணங்கள், விமல்நாத், Sixthsense, Publications