ரொமெய்ன் ரோலந்து என்ற, பிரெஞ்சு பேரறிஞர் எழுதிய மகாத்மா காந்தி பற்றிய ஆங்கில நூலினை, புகழ்மிக்க எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழில் தந்திருக்கிறார். மொழிபெயர்க்கும் பணியில் தமது துணைவி திருமதி ஜெயஜனனி, பெரிதும் உதவியது பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார்.மகாத்மாவின் அருங்குணங்கள், சுதந்திரப் போராட்டம் தொடர்பான அவருடை பல்வேறு செயற்பாடுகள், சத்யாக்கிரக நிகழ்வுகளில் அவர் பின்பற்றிய விதிமுறைகள், பிறர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு காந்தி அளித்த பதில்கள், அகிம்சா தத்துவம் என, ஒட்டுமொத்தமாக மகாத்மா பற்றிய ஓர் உயரிய மதிப்பீடாக அமைந்துள்ள, ஒப்பற்ற இந்த நூலினை, மிக சிறப்பாக தமிழாக்கம் செய்து அளித்துள்ளார் ஜெயகாந்தன்.மூன்று பாகங்களாக விரியும் இந்த நூலில், ஒவ்வொர் அத்தியாய ஆரம்பத்திலும், ஓவியர் ஆதிமூலம் வரைந்த மகாத்மாவின் கோட்டோவியங்கள் இடம் பெற்றுள்ளன.
வாழ்விக்க வந்த காந்தி-Vazhvikka Vantha Gandhi
- Brand: ஜெயகாந்தன்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹150
Tags: vazhvikka, vantha, gandhi, வாழ்விக்க, வந்த, காந்தி-Vazhvikka, Vantha, Gandhi, ஜெயகாந்தன், கவிதா, வெளியீடு