பிரியாணியை ரசிக்காதவர்களும் ருசிக்காதவர்களும் இல்லை. அம்மி, உரல் காலத்து பாட்டி, தாத்தா முதல் இன்றைய மிக்ஸி, ஓவன், இண்டெர்நெட் தலைமுறை வரை அனைவருமே பிரியாணியின் பரம விசிறிகள்தாம்.இத்தனைக்கும் நாம் ஒரு சில பிரியாணி வகைகளை மட்டுமே சுவைத்திருப்போம். அதன் அத்தனை வடிவங்களும் / வகைகளும் தெரிந்தால் ஆச்சரியத்-திலும் மகிழ்ச்சியிலும் ஒரு குட்டி மயக்கமே வந்து-விடும்.பஸந்தா பிரியாணி, பீலி பிரியாணி, ஷாஹி பிரியாணி, சோயா பீன்ஸ் பிரியாணி, கேசரியா பன்னீர் பிரியாணி, ஓரியண்டல் பிரியாணி, காஜு ஆலு பிரியாணி என எண்ணற்ற, வகைவகையான பிரியாணிகளுடன் அந்தந்த ஊர்களுக்கே/மாநிலங்களுக்கே உரித்தான கொங்கு நாட்டு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, வெள்ளக் கோவில் பிரியாணி, தேவக்கோட்டை பிரியாணி முதல் காஷ்மீரி பன்னீர் பிரியாணி, பாட்டியாலா பிரியாணி, ஜோத் பூரி பிரியாணி, நவாபி ஹைதராபாதி பிரியாணி, நெல்லூர் பிரியாணி செய்முறைகளும் இந்தப் புத்தகத்தில் அணிவகுத்துள்ளன.உண்மையில் பிரியாணி என்பது ஒரு தனி உலகம். நகரத்துக்கு நகரம், மூலைக்கு மூலை வெவ்வறு வடிவங்களில், வெவ்வேறு ருசிகளில் பிரியாணி சமைக்கப்படுகிறது. அவற்றில் சிறந்த பிரியாணி வகைகளை மட்டும் தேர்ந்தெடுத்து செயல்முறை குறிப்புகளுடன் அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். பிரியாணி வகைகள் மட்டுமல்ல வெஜிடெபிள் புலாவ், ஃப்ரைட் ரைஸ் ரெசிப்பிகள் என 100க்கும் மேலான சமையல் குறிப்புகளுடன் கூடவே பிரியாணிக்குத் தொட்டுக் கொள்ள கிரேவி, குழம்பு ரெசிப்பிகளும், தால், பச்சடி குறிப்புகளும் கொண்ட அசத்தல் புத்தகம் இது.இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் பிரியாணி சமையலில் முடிசூடா மகாராணி/மகாராஜா நீங்கள்தான். சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள்.கமகமக்கும் ஒரு புது உலகம் உங்களை வரவேற்கிறது!
வெஜிடெபிள் பிரியாணி வகைகள்-Vegetable Biriyani Vagaigal
- Brand: தீபா சேகர்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹175
Tags: , தீபா சேகர், வெஜிடெபிள், பிரியாணி, வகைகள்-Vegetable, Biriyani, Vagaigal