முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.வாழ்வே மகரந்தம் தடவிய மாதிரி மாறிப்போகும் எனத் தாங்கள் ‘நம்பும் தொழிற்படிப்புக்களைக் கோட்டை விட்டால் இனி உய்ய வழியில்லை என விரக்தியடையும் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது இந்நூல்.டாக்டர் பொற்கோ, முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம்இந்த நூல் வேலை வாய்ப்புக்குரிய அறிவையும் தகவல்களையும் தருவதோடு சோம்பிக் கிடப்பவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டி எழுச்சியோடு நிமிர்ந்து நிற்கச் செய்கிறது.இ. சுந்தரமூர்த்தி, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக் கழகம்பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் தொடர்பு கொண்டு தேட வேண்டிய தேடல்களை ஒரே இடத்தில் இந்த நூலில் கொண்டு வந்து தந்துள்ளனர்.பேராசிரியர் ஆதி. கலாநிதி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக் கழகம்வழக்கமான தொழிற்கல்விப் படிப்புகள் தவிர வேறு படிப்புகளுக்கு எதிர்காலம் எதுவும் இல்லை என்ற மாயையை இந்நூல் தகர்த்துள்ளது. இளைஞர்களின் தனித்திறமைக்கேற்ப தொழில் சார்ந்த பல்வேறு படிப்புகள் படிக்க இந்தியாவில், அதுவும் நமது மாநிலத்திலேயே வாய்ப்புகள் உள்ளது என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். நூலாசிரியரின் இந்த முயற்சி இளைய சமுதாயம் மட்டுமின்றி ஓய்வு பெற்றோர், வீட்டுப்பெண்கள் மற்றும் சுயதொழில் ஆர்வலர்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளது.
வேலை கிடைக்கும் வித்தியாசமான படிப்புகள்
- Brand: டாக்டர் ம.லெனின்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹175
Tags: velai, kidaikum, vithiyaasamaana, padippugal, வேலை, கிடைக்கும், வித்தியாசமான, படிப்புகள், டாக்டர் ம.லெனின், Sixthsense, Publications