தமிழ் வாசகர்கள் இதுவரை அறியாத திக் திக் மர்மங்களின் திகில் சரித்திரம்.பேய் -- பிசாசு - ஆவி - பில்லி - சூனியம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகம் அடங்காது. அவற்றையும் தாண்டி, தூக்கத்தைத் தொலைய வைக்கும், ரத்தத்தை உறைய வைக்கும் கருப்பு பக்கங்கள் மேல், இந்தப் புத்தகம் வெளிச்சம் பாய்ச்சுகிறது.ஒருபுறம் விநோதங்களுக்கான விடைகளைத் தேடித்தேடி அறிவியலின் வளர்ச்சி நிகழ்கிறது. இன்னொருபுறம் அறிவியலுக்குள்ளும் பகுத்தறிவுக்குள்ளும் அடங்காத மர்மங்கள், சாகாவரத்துடன் வில்லச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத அந்த மர்மங்களின் கதகதப்பை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம்.நம்மைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாமல் நிறைந்திருப்பது ஆக்ஸிஜன் மட்டுமல்ல; அமானுஷ்யங்களும்தான். மனித அறிவால் உணர முடியாத, மனத்தால் மட்டுமே உணர முடிந்த உயிரை உலுக்கும் மர்மங்கள் ஏராளம். ‘இப்படிக்கூட நடக்குமா?’ என நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவங்கள், வரலாறெங்கும் நிறைந்து கிடைக்கின்றன.
வெளிச்சத்தின் நிறம் கருப்பு புத்தகத்திற்காக கவிதை உறவு விருது ஆய்வு/ பொதுக்கட்டுரை பிரிவில் மூன்றாவது பரிசு கிடைத்தது.
வெளிச்சத்தின் நிறம் கருப்பு
- Brand: முகில்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹350
Tags: velichchaththin, niram, karuppu, வெளிச்சத்தின், நிறம், கருப்பு, முகில், Sixthsense, Publications