இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகமெங்கும் தொழிற்சங்க இயக்கம் ஆரம்பித்தது. இந்தியாவில் அமைந்த முதல் தொழிற்சங்கம் 1890ல் அமைந்த மும்பை மில்ஹண்ட்'ஸ் தொழிலாளர் அமைப்பு (Bombay Millhand's Association). 1905ல் கல்கத்தா அச்சகத் தொழிலாளர் சங்கம் அமைந்தது (Printers' Union formed in Calcutta). 1907ல் மும்பை தபால் ஊழியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து பல தொழிற்சங்கங்கள் அங்கிங்காக உருப்பெற்றன. அவற்றின் ஒட்டுமொத்த விளைவாக அகில இந்தியத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு (All India Tradc Union Congress) உருப்பெற்றதுடன் இந்திய அளவில் தொழிற்சங்க இயக்கம் உருவாகியது. உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். மறு பக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும். இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது. எங்கே நம் நீதியுணர்ச்சியை இழந்தோம் என இன்றாவது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.
வெள்ளையானை (கெட்டி அட்டை)-Vellaiyaanai Keatti Attai
- Brand: ஜெயமோகன்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹600
Tags: vellaiyaanai, keatti, attai, வெள்ளையானை, (கெட்டி, அட்டை)-Vellaiyaanai, Keatti, Attai, ஜெயமோகன், வம்சி, பதிப்பகம்