வில்லில் இருந்து புறப்பட்டு வரும் அம்பு தன் இலக்கை அடைய எடுத்துக்கொள்ளும் வேகத்தையே மிஞ்சும் வைகோவின் சொல் அம்பு. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதானே! அரசியல்வாதி, இலக்கியவாதி, சொற்பொழிவாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முக ஆளுமைகள் வைகோவிற்கு இருந்தாலும், அவர் தமிழின உணர்வாளர் என்பதே அவரது தனித்துவ அடையாளம். அந்த அடையாளத்தின் வழி நின்று வைகோ ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்திலும் தமிழின விடியலுக்கான வார்த்தைகள் தீப்பிழம்பாய் வந்திறங்கும்.