மனிதவாழ்வியலில் புறத்தை மட்டுமே உண்மை என்று நம்பி இருக்கக்கூடிய சூழல் இது. மனிதனின் அகத்தில் உள்ள பிரச்சனைகளும், எண்ணங்களும் யாருக்கும் தெரியப்போவதில்லை. மனிதனுடைய வெளித்தோற்றம் மட்டுமே அடுத்தவரை பொறுத்தவரை உண்மையானது என்ற போக்கு விரிவடைந்து வரும் நிலையில், மனித உடம்பை போர்த்தியுள்ள தோலில் வரும் பிரச்சனைகள் பெரிதாக பார்க்கப்படுகின்றன. ஆம், மனித தோலில் உருவாகும் வெண்புள்ளிகள் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளச்சலை ஏற்படுத்துகிறது. வெண்புள்ளிகள் உள்ள மனிதனை சமூகம் வேறுபார்வையில் பார்க்கிறது. ஒருவித அருவருப்பு, தயக்கம், தொட்டுப்பேச கூச்சம் என வெண்புள்ளி பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதோர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். இது சரியா? அதுவும் பெண் ஒருவருக்கு வெண்புள்ளி இருந்தால் அவள் சமூகத்தில் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அந்த பெண்ணுக்கு திருமணம் நடப்பதில் தொடங்கி குழந்தை பெறுவதில் வரை ஒருவித குற்ற உணர்ச்சியோடே அவர் இருக்க வேண்டிய நிலை உள்ளது. வெண்புள்ளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்பவருக்கும் வெண்புள்ளி வந்துவிடுமா? அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கும் வெண்புள்ளி வந்துவிடுமா? என்றெல்லாம் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் மனோபாவம் அனைவரிடமும் உள்ளது. ஆனால், வெண்புள்ளிகளால் அதனால் பாதிக்கப்பட்ட மனிதருக்கும், அந்த மனிதருடன் பழகுபவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்கிறது இந்நூல். வெண்புள்ளி என்பது ஒரு நோயே அல்ல.. வெண்புள்ளி பாதித்தவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் உறுதி கூறுகிறது இந்த நூல். மனிதசமுதாயம் வெண்புள்ளிகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்களை சொல்லும் இந்த நூலை படியுங்கள். வெண்புள்ளி வீண் கவலை என்பதை உணருங்கள்.
வெண்புள்ளிகளும் தீர்வும்
- Brand: கே. உமாபதி
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹80
-
₹68
Tags: vepulligalum, theervum, வெண்புள்ளிகளும், தீர்வும், கே. உமாபதி, விகடன், பிரசுரம்