• விதைச் சோளம்-Vethai Solam
இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கைகள் மெல்ல மெல்லச் சரிந்து வரும் நிலையில், நீதியரசர் கே.சந்துரு எழுதியுள்ள இந்த நூல் நம் குமுகக் (சமூக) கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறது. அத்துடன், நீதித்துறையின் கடமைகளையும் பொறுப்புகளையும் வலியுறுத்தவும் தயங்கவில்லை. சந்துரு கடந்த காலத்தில் உயர்நீதிமன்ற நீதியரசராகப் பணிபுரிந்ததால் இவரின் கவலைகளும் வழிகாட்டல்களும் கவனிக்கப்பட வேண்டியவையாகின்றன. நீதித்துறையை இந்திய மாண்புகளைக் காக்கும் கட்டமைப்பாகப் படிக்காதவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நீதிபதிகளின் மேலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்தியாவின் சாபக்கேடான சாதியத்தின் கருத்தியல்களைத் தாண்டி நீதிபதிகளும் வெளிவர முடியாமல் தவிப்பதால் அதன் போக்குகள் காலம் காலமாகக் கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றன. நீதியை எதிர்பார்க்கும் நேரங்களில் அதுவே நீதியின்மைக்கும் சுரண்டலுக்கும் வழியமைத்துக் கொடுக்கின்றது.  அரசியலாளர்களின் மேல் வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் மேம்போக்காக அணுகி வந்துள்ளன. மதுரையை அடுத்துள்ள மலைகள், கருங்கற்களாகத் (granite) தகர்க்கப்பட்டுள்ளன. மலைகளைக் காக்க, முறைகேடான வகையில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுவதைத் தடுக்க ஏதேனும் வழக்குகள் பதிவானால், கொள்ளையர்கள் நீதிமன்றத்தின் அருள் வெள்ளத்தினால் கரையேறி விடுகிறார்கள். இதனால் முறையாகச் செயல்படும் அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

விதைச் சோளம்-Vethai Solam

  • ₹90


Tags: vethai, solam, விதைச், சோளம்-Vethai, Solam, சூர்யகாந்தன், கவிதா, வெளியீடு