இந்த மக்கள் அனைவரும், உரிய நேரத்தில் சரியான முடிவை எடுத்து, வாழ்க்கையின் ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொள்ள தனக்குத் தானே தயாராகியுள்ளவர்கள். இன்று அவர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஊக்குவிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்க்கையில் ஒன்று மட்டும் மிகவும் நிலையானது என்று நம் அனைவருக்கும் தெரியும். அது வாழ்க்கை நிலையில்லாதது என்பதுதான். நமது வாழ்க்கையில் அடுத்ததாக என்ன நடைபெறும், நாளை என்ன நடக்கப் போகிறது என்பது நம்மில் யாருக்கும் தெரியாது. வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும், அதிலிருந்து மீண்டுவருவதற்கும் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் நமக்கு பலத்தை அளிக்கின்றன. இது பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி பீமா திட்டம் (ஆயுள் காப்பீட்டு திட்டம்) அல்லது பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா திட்டம் (விபத்துக் காப்பீட்டு திட்டம்) அல்லது அடல் ஓய்வூதியத் திட்டம் அல்லது பிரதம மந்திரியின் வய வந்தனா திட்டம் (மூத்த குடிமக்களுக்கான நீண்டகால வருமான திட்டம்) என எதுவாக இருந்தாலும், இந்தத் திட்டங்கள் மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கம் கிடைத்துள்ளது.
சமூக பாதுகாப்புத் திட்டங்கள், சாதாரண மக்கள், குறிப்பாக சமூகத்தில் பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள மக்களை மேம்படுத்துகின்றன. இதன்மூலம், நெருக்கடியான நேரங்களை அவர்களால் எதிர்கொள்ள முடியும். வாழ்க்கைக்கான போராட்டத்தில் தோற்றுப் போகமாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, ஏழை மக்களுக்கு வங்கிக்கணக்கு கூட கிடையாது. எந்த வகையான நிதி ஆதரவும் கிடைப்பது என்பது எளிதானதாக இல்லை.
வெற்றிகரமான வாழ்க்கைக்கு 52 வழிமுறைகள் - Vetrikaramana Vaazhkaikku 52 Vazhimuraikal
- Brand: மு. சிவலிங்கம்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹96
-
₹82
Tags: vetrikaramana, vaazhkaikku, 52, vazhimuraikal, வெற்றிகரமான, வாழ்க்கைக்கு, 52, வழிமுறைகள், -, Vetrikaramana, Vaazhkaikku, 52, Vazhimuraikal, மு. சிவலிங்கம், கண்ணதாசன், பதிப்பகம்