வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது. அதாவது விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் எதிர்த்து விளையாடுபவரை தோற்கடிக்க வேண்டும். ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சுற்றிலும் உள்ளவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
விளையாட்டில் “தோல்வி – வெற்றி” (Lose-win) நிலை உண்டு. ஆனால் வாழ்க்கையில் “வெற்றி வெற்றி” என்ற (Win – Win) நிலை மட்டுமே நிலையானது.
இலட்சியம்
நீங்கள், மற்றவரை தோற்கடித்து பெறும் வெற்றி நிலையானது அல்ல; அது நிம்மதியைக் கொடுக்கக்கூடியதும் அல்ல. ஆகவே இந்த அடிப்படைத் தத்துவத்தையும் புரிந்து செயல்பட வேண்டும்.ஒவ்வொருவருக்கும் தனித்தன்மைமிக்க இலட்சியம் இருக்கலாம். அவர்களது இலட்சியம் பொது நன்மை தரக்கூடியதாக இருக்குமானால் அவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். அவ்வாறு உங்கள் உதவிக்கரம் நீளும்போது அவரும் உங்களுக்கு உதவ முன்வருவர்.
அவ்வாறு இல்லாமல் அவரின் பாதையில் நீங்கள் தடைக்கல்லாக மாறும்போது அவரும் உங்களின் பாதையில் முட்களை வீசத் தொடங்குவார். பின்னர், அம்முட்களை அகற்றவே உங்கள் வாழ்நாள் போதாதபோது உங்களால் எப்படி முன்னேற முடியும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
வெற்றியின் விதைகள் - Vettriyin Vidhaigal
- Brand: மனோசக்தி மாசிலாமணி
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹130
-
₹111
Tags: vettriyin, vidhaigal, வெற்றியின், விதைகள், -, Vettriyin, Vidhaigal, மனோசக்தி மாசிலாமணி, கண்ணதாசன், பதிப்பகம்