உண்மையான உணர்வுகளோடு நமக்குள்ள தொடர்பை நாம் இழந்துவிட்டோம். நமது அதிவேகமும், பரபரப்பும்,ஓட்டமும், போட்டியும், அநாவசிய தேவைகளின் அதிகரிப்பும் நமது சக்தியை பெரிதும் உறிஞ்சி விடுகின்றன. நுண்ணுணர்வுகளை உணரக்கூடிய தளர்வும், கூர்மையும், தீவிரமும் நம்மிடம் இல்லை. அப்படி சக்தியோடிருக்க நமக்கு வழியும் தெரியவில்லை. இந்நிலையில் நாம் உணர்வுகளுக்கு பதிலாக, அதைக் குறிக்கும் வெற்றுச் சொற்களில் சிக்கிக் கிடக்கிறோம். அந்த சொற்களின் உணர்வுகளை நாம் இழந்துவிட்டோம். அதனால் மதம், அரசியல், அதிகாரம், செல்வம் படைத்த சுயலாபக் கும்பல், அதற்குத் தவறான விளக்கங்களைக் கூறி அதை நம்மை நம்ப வைத்து, நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றனர். ஓஷோ இப்போது நம்மை அந்த முக்கியமான சொற்களின் நிஜ உணர்வுகளுக்குக் கூட்டிச் செல்ல முயற்சிக்கிறார். நாம் எப்படி தவறான விளக்கங்களில் சிக்கிக் கிடக்கிறோம் என்று சிக்கல் எடுக்கிறார். மேலும் அந்த உணர்வுகளின் உச்சிகளைத் தொட்டுக்காட்டி விழிப்பூட்டுகிறார். இதுதான் இந்த புதியதொரு வாழ்க்கைக்கான பார்வைகள் புத்தகவரிசை. இவை புத்தகங்களல்ல விழிப்புணர்வூட்டும் ஓர் விடியலின் வைகறை அனுபவங்கள். இவை மூலம் மன இருளிலிருந்து விழிப்புணர்வு வெளிச்சத்திற்கு வர அனைவரையும் அழைக்கிறேன். நன்றியும் அன்பும்
Tags: viduthalai, விடுதலை, நீ, நீயாக, இரு-Viduthalai, ஓஷோ, கவிதா, வெளியீடு