மாமன்னன் கிருஷ்ண தேவராயன் காலத்தில் அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் தெனாலிராமன். மாமன்னருக்குஉற்ற நண்பராகவும், மதியூக மந்திரியாகவும் விளங்கியவர் இவர்.
சக்கரவர்த்தி அக்பருக்கு பீர்பால் அமைந்ததுபோல் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு தெனாலிராமன் கிடைத்திருந்தார்.
இவருடைய போக்கு சில சமயம் விசித்திரமானதாகவும், வினோதம் நிறைந்ததாகவும் இருந்தாலும் இவர் மிகச் சிறந்த அறிஞர் என்பதில் சந்தேகமில்லை.
இவருடைய செய்கைகள் பழ சமயங்களில் சிரிப்பை வரவழைக்கக்கூடியவயாக இருந்தாலும் பெரிதும் சிந்திக்கவும் வைக்கக்கூடியவயாகவும் இருந்தது.
ஒரு மனிதனுக்கு படிப்பறிவு மட்டும் இருந்தால் போதாது.பட்டறிவும் அவசியம் என்பதை இவருடைய கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இவருடைய சமயோசித புத்தியின் காரணமாக தீர்க்கப் பட்ட பிரச்சினைகள் ஏராளம்.
இந்தப் புத்தகத்திலுள்ள கதைகள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் சமயத்திற்கு ஏற்றவாறு நடந்துகொண்டு வாழ்க்கையில் உயர்வதற்கான புத்திக் கூர்மையையும் அளிக்கும்.
விகடகவி தெனாலிராமன் வினோத கதைகள்
- Brand: ராதாகிருஷ்ணன்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹166
Tags: vikadakavi, thenaliraman, vinotha, kathaigal, விகடகவி, தெனாலிராமன், வினோத, கதைகள், ராதாகிருஷ்ணன், வானவில், புத்தகாலயம்