கண்ணதாசனை ஏன் எதற்கு என்று தெரியாமல் எனக்கு பிடித்திருந்தது. என் மகளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று கடைக்கு போய் அவளுக்கு வாங்கிவிட்டு சும்மா சுற்றி வரும்போது கண்ணதாசன் என் கண்ணில் பட வேண்டுமா? அப்போது என் கண்ணில் பளிச்சென இந்த நாவல் “விளக்கு மட்டுமா சிவப்பு?”. ஓரளவு கதை எதை பற்றி என தலைப்பை வைத்தே ஊகிக்க முடிந்தது. அதை கவனித்த என் மனைவியோ என்னை ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டது போல் பார்த்தாள். “வேற எதுவும் கிடைக்கலியா உங்களுக்கு வாங்க” என அர்ச்சனை வேறு. இதெயெல்லாம் மீறி வாங்கி வந்த இந்த நாவலை படித்து முடிக்க 2 மாதம் ஆனது எனக்கு.
கதை கரு மிகவும் சிறியதுதான். கிராமத்தில் நன்றாய் வாழ்ந்த ஒரு குடும்பம் தாய் தந்தையை இழந்து பொருளாதார சிக்கலினால் பிழைக்க சென்னைக்கு வருகிறது
விளக்கு மட்டுமா சிவப்பு - Vilakumattuma Sivapu
- Brand: கவிஞர் கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹150
-
₹128
Tags: vilakumattuma, sivapu, விளக்கு, மட்டுமா, சிவப்பு, -, Vilakumattuma, Sivapu, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்