விதைக்கும் விதை சரியாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். இது
ஆடிப்பட்டத்துக்கு மட்டுமல்ல, எல்லா பட்டத்துக்கும் பொருந்தும். மற்ற
பொருட்களைப் போல விதைகளை முழுமையாக சோதனை செய்து பார்த்தெல்லாம் வாங்க
முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாங்க முடியும். அந்த விதை பலன்
தருமா என்பது பல மாதங்கள் கழித்துத்தான் தெரிய வரும். ஆனால்,
சான்றளிக்கப்பட்ட விதைகளை வாங்கும்போது பெரும்பாலும் இப்பிரச்னைகள்
வருவதில்லை. அப்படி சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளை, நியாயமான விலையில்
விற்றுவருகிறது, மத்திய வேளாண் துறையின்கீழ் இயங்கிவரும் தேசிய விதைக்
கழகம் (National Seed Corporation). இங்கு விதைகள் ஆடிப்பட்டத்தில்
மட்டுமல்ல ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன.
Tags: vithaigal, விதைகள், பூவுலகின் நண்பர்கள், எதிர், வெளியீடு,