இந்த நாவலை எழுதத் தொடங்கியபோது என் மனதில் இருந்தவை ஒன்றோடொன்று ஒரு தொடர்புமற்ற சிதறல்கள்தான். வாழ்க்கையில், சம்பவங்களும், அனுபவங்களும் வரிசைக்கிரமமாக, நிகழ்வதில்லை யல்லவா? நினைவுகளின் நிழலாட்டத்தை அநேகம் திரைகள் மூடியிருந்தன. பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே கழிந்த என் குழந்தை பருவத்தில் என்னைச் சுற்றியிருந்த பெண்கள், அவர்களின் பிரத்தியேகமான குணாம்சங்கள், உள் மனங்களில் கசிந்து கொண்டிருந்த துக்கம். மனித உறவுகளின் சிக்கல்கள் என்று எழுத முயன்றபோது எண்ணியே யிராத விசித்திரமான திசைகளுக்கு என்னைச் சொற்கள் இழுத்துச் செல்வதை உணர்ந்தேன். வடிவம் பற்றிய குறிப்பான வரையறைகள் எதையும் நான் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. நாவலில் கிடைக்கும் விசாலமான பரப்பும், எல்லையற்ற சுதந்திரமும் எனக்கு மிகவும் பிடித்தமானதாயிருக்கின்றன. ஆனால் இதை எழுதி முடித்த பின்பும் ஒருநிறைவின்மையை, அதிருப்தியை உணர்கிறேன். சொற்கள் எதையும் உள்ளிட ஏதுவானவை போல் தோற்றமளித்தாலும் மனதின் இருண்ட மூலைகளை முற்றிலுமாகச் சொற்களில் உணர்த்திவிட இயலாதென்றே தோன்றுகிறது. தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பெண் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் உமா மகேஸ்வரி. பெண்களின் அகவுலகம் பற்றி எழுதும் போது அது எல்லேரையும் பதற வைக்கிறது, அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது, கவலைப்பட வைக்கிறது, யோசிக்க வைக்கிறது. அவை மனித மனதை சிறிதாவது அசைத்துப் பார்த்தால், செயல் வடிவம் அடையுமேயானால் அதுவே படைப்பின் வெற்றியாகும்.
யாரும் யாருடனும் இல்லை-Yaarum Yaarutanum Illai
- Brand: உமா மகேஸ்வரி
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹260
Tags: yaarum, yaarutanum, illai, யாரும், யாருடனும், இல்லை-Yaarum, Yaarutanum, Illai, உமா மகேஸ்வரி, வம்சி, பதிப்பகம்