• Yavani/யவனி-யவனி
தமிழில்: சத்தியப்பிரியன்ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் அரசியலை, வரலாற்றை, வாழ்க்கை முறையை, போராட்டத்தை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் தேவி யசோதரன்.சோழர் காலப் பின்னணியில் விரியும் பிரமாண்டமான இந்தப் புதினத்தை வாசிக்கும்போது திரைப்படம் போல் காட்சிகள் மனக்கண்ணில் விரிகின்றன.இப்புனைவில் நிகழும் பண்டைய தமிழகத்து நிகழ்வுகளின் வழியே நாம் அடையும் சித்திரம், நம் முன்னோர்கள் குறித்த நம் தேடலை அதிகப்படுத்துகிறது. வீரத்துக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகத் திகழும் யவனியின் சாகசங்கள் நம் நினைவுகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. நேசம், காதல், பகை, சூது, வன்மம், போராட்டம் என்று கடல் அலைகளுக்குப் போட்டியாகப் பொங்கும் உணர்ச்சிகள் இந்நாவலை மறக்கமுடியாத ஒரு பேரனுபவமாக உயர்த்துகிறது.பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்த நாவலும் உங்களுக்குப் பிடிக்கும். ஆங்கிலத்தில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த ‘எம்பயர்’ நாவலின் அதிகாரபூர்வமான மொழியாக்கம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Yavani/யவனி-யவனி

  • ₹420


Tags: , தேவி யசோதரன், Yavani/யவனி-யவனி