ஒரு கதைக்குள் பல கதைகளைப் புகுத்தி, ஓர் அனுபவத்துக்குள் பல அனுபவக் குவியல்களைப் பதுக்கி, ஓருடலில் பல உயிர்களைக் கலக்கும் அசாத்தியமான திறன் கொண்டவர் யுவன் சந்திரசேகர்.நேர்க்கோட்டில் பயணிக்கும் ஓர் எளிமையான சம்பவம், மறுவாசிப்பின் போது, முற்றிலும் புதியதொரு அனுபவத்தை, அதுவரை நாம் அறிந்திராத பல ஆச்சரியங்களை அளிப்பதை என்னவென்று சொல்வது?மாற்று மெய்மை என்று அதனை அழைக்கிறார் யுவன் சந்திரசேகர். அசாதாரணமான நிகழ்வுகளில் உள்ள இயல்புத் தன்மைகளையும் இயல்பான நிகழ்வுகளில் ஒளிந்துள்ள ஆச்சரியமூட்டும் அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் ரஸவாதம் என்றுதான் அதனை அழைக்கமுடியும்.யதார்த்தமும் மாயமும் கைகோர்க்கும் அற்புதக் கணம் அது. யுவனின் ஒவ்வொரு சிறுகதைகளிலும் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது இந்த அதிசயம்.
Tags: , யுவன் சந்திரசேகர், ஏற்கனவே-Yerkanavae