யோகா என்றால், சாந்தம், அமைதி, ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம்! நம் மனதைக் கட்டுப்படுத்தி, நம்முள்ளே இருக்கிற இறைத் தன்மையை அறிய உதவும் ஓர் அற்புதமான பயிற்சிதான் யோகா.
இன்றைக்கு யோகா கலை அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. உலக அளவில், பலதரப்பட்ட நோய்களுக்கும் நிவாரணியாக யோகா பயிற்சிகளை (யோகா தெரபி) மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
நவீன உலகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் வேகமான, பதற்றம் நிறைந்த வாழ்க்கை முறை, சந்தோஷத்தைக் காட்டிலும் மனிதனுக்கு கூடுதலான சங்கடங்களையும், மன ரீதியான பிரச்னைகளையுமே கொடுக்கின்றன. அதனால் ஏற்படும் மனக் குழப்பம், அமைதியின்மை, கோபம் ஆகியவற்றால் உடல் பாதிக்கப்படுகிறது.
யோகா பயிற்சி மனதை அமைதிப்படுத்துகிறது. மன இறுக்கத்தைப் போக்குகிறது. நோயின் தாக்கம் கணிசமாகக் குறைகிறது.
ஜெர்மனியில் எட்டுப் பேரில் ஒருவர் யோகா பயிற்சி செய்பவராக இருக்கிறார். நார்வே, ஸ்வீடன் உட்பட இன்னும் பல நாடுகளில் உள்ள மருத்துவமனைகளிலும் உடற்பயிற்சிக் கூடங்களிலும் யோகா பயிற்றுவிக்கப் படுகிறது. அலுவலகங்களிலும்கூட யோகா வகுப்பு உண்டு! உலகம் முழுவதும் யோகா பிரபலமாக இருந்தாலும் அதன் ஆணிவேர் நம் இந்திய தேசத்தில் ஊன்றப்பட்டது என்பதை நினைத்துப் பெருமிதம் கொள்வோம்.
விவேகானந்தா கேந்திரத்தின் வழிகாட்டலில், சக்தி விகடன் இதழில் இந்தக் கட்டுரைகள் யோகா... ஆஹா! என்ற பெயரில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
யோகா... ஆஹா!
- Brand: விவேகானந்தா கேந்திரம்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹110
-
₹94
Tags: yoga, aahaa, யோகா..., ஆஹா!, விவேகானந்தா கேந்திரம், விகடன், பிரசுரம்