இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் புரியாத தன்மையே அதற்குள்ள பெருமை என்ற ஒரு வீணான மாயையும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒரு புத்தகத்திற்குத் தான் சுமந்து கொண்டிருக்கும் கருத்தை முழுவதுமாகவும் மிகத் தெளிவாகவும் விளக்க வேண்டிய கடமையிருக்கிறது. அதுதான் அந்தப் புத்தகத்தின் பிரதான நோக்கமாகவும் இருக்கவேண்டும். இதைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.உலகின் மாபெரும் தத்துவக் கடல் என்று போற்றப்படுவது இந்து மதம். ஆனால் இந்து மத ஆராய்ச்சியாளர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவை ஜென் கோட்பாடுகள். வழக்கத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஜென் குரு கதைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு மகத்தான உண்மை பொதிந்திருக்கும். ஒரு மாபெரும் பிரபஞ்சத்தின் தத்துவம் அந்தக் கதையின் மூலம் உணர்த்த முயற்சிக்கப்பட்டிருக்கும்.
ஜென் தத்துவக் கதைகள்
- Brand: குருஜி வாசுதேவ்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹233
Tags: zen, thaththuva, kathaikal, ஜென், தத்துவக், கதைகள், குருஜி வாசுதேவ், Sixthsense, Publications